தொடக்கம் |
2.110 திருமாந்துறை - நட்டராகம்
|
|
|
2659. |
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,
செருந்தி,
செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்
பரந்து உந்தி,
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை
உறைகின்ற
எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்
செய்வோமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2660. |
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்
மணி நிரந்து
உந்தி,
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான்,
அத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன்,
நெற்றி
அளக வாள்நுதல் அரிவை தன் பங்கனை அன்றி, மற்று
அறியோமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2661. |
கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும்
கூந்தலின்
குலை வாரி
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்,
வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து
ஏத்தும்
கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல்
அறியோமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2662. |
இலவம், ஞாழலும், ஈஞ்சொடு, சுரபுன்னை,
இளமருது,
இலவங்கம்,
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்;
அலை கொள் வார்புனல், அம்புலி, மத்தமும், ஆடு அரவு
உடன் வைத்த
மலையை; வானவர் கொழுந்தினை; அல்லது வணங்குதல்
அறியோமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2663. |
கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி,
குரவு, இடை
மலர் உந்தி,
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர்
சேர்த்தி,
தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும்
தவத்தோரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2664. |
பெருகு சந்தனம், கார் அகில், பீலியும்,
பெரு மரம்,
நிமிர்ந்து உந்தி,
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன்
எம்பெருமானை
பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர்
பணிந்து ஏத்த,
மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல்
செய்வோமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2665. |
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர்
அவை
வாரி
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை,
அன்று அங்கு
அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன்,
வரைவில்லால்
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல்
பணிவோமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2666. |
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள்,
மாணிக்கம்
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை;
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு
விரலானை;
சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீ நெறி அதுதானே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2667. |
நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை
மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை
நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்
நலியானே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2668. |
நின்று உணும் சமண், தேரரும், நிலை இலர்;
நெடுங்கழை,
நறவு, ஏலம்,
நன்று மாங்கனி, கதலியின் பலங்களும், நாணலின் நுரை
வாரி,
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒரு காலம்
அன்றி, உள் அழிந்து எழும் பரிசு அழகிது; அது அவர்க்கு
இடம் ஆமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2669. |
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை
உறைவானை,
சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை
நாவன்,
அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு
மாலை
பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்
தாமே. |
11 |
|
உரை
|
|
|
|