3002. |
சங்கணி
குழையினர் சாமம் பாடுவர் |
|
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே. 5 |
5.
பொ-ரை: இறைவர் சங்கினாலாகிய குழை அணிந்த
காதினர். சாமவேதத்தைப் பாடுவார். மிகுந்த வெப்பமுடைய
நெருப்புச் சுவாலை வீசத் தோள்வீசி ஆடுவார். அழகிய
திருவிழாக்கள் நடைபெறும் அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ
மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
சங்கை அணிந்த காதையுடையவர். சாமவேதத்தைப்
பாடுவார் கொடிய நெருப்புச் சுவாலிக்கத் தோளை வீசி ஆடுவர்
- என்பது முதலிரண்டடியின் பொருள். சங்கு - ஆகு பெயர்.
எண்தோள் வீசி
நின்றாடும் பிரான் என அப்பர்
பெருமான் வாக்கில் வருவதால் வீசி என்பதற்குத் தோள்
வருவித்துரைக்கப்பட்டது. அழகிய திருவிழாக்களை உடைய
அம்பர். சங்கண்நல் இறை - நல்ல கோச்செங்கட் சோழர்,
செய்த கோயில்.
|