3218. |
மேலெனக்கெதி ரில்லையென்ற |
|
வரக்கனார்
மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்கெளி யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே. 8 |
8.
பொ-ரை: தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை
என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப்போன்று
செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து ஏத்தாது,
பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு,
பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு
ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவன்பின் ஒருவராய்ச்
செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு, யான்,
திருவாலவாயரன் என்னுள்துணை நிற்றலால் எளியவனல்லேன்.
கு-ரை:
அரக்கனார், இகழ்ச்சிக் குறிப்பு. தீப்போலி -
தீப்போன்றவன். அழலுருவன். நிறத்தில் அழல்போலினும் அருளில்
நீர் போல்பவன் என்பார் தீ என்னாது தீப்போலி என்றார்.
பணியக்கிலாது. ககரம் விரித்தல் விகாரம். குண்டிகை...... சீலிகள் -
சமணர் இயல்பைக் குறித்தது. சீலம் - ஒழுக்கம்; சீலி - ஒழுக்க
முடையோன். வழியில் எறும்பு முதலிய சிற்றுயிர்கட்கும் ஊறுபடாது
நடப்பார் போன்று மயில் (பீலி) தோகையால் நிலம் கூட்டி மிதித்துச்
செல்வர்,
|