3383.
|
நல்லார்கள்
சேர்புகலி ஞானசம் பந்தனல்ல |
|
எல்லார்களும்பரவு
மீசனை யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே. 12 |
12.
பொ-ரை: சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும்
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மெய்யன்பர்களால் நன்கு
வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள்
பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும். இதனை ஓத
வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர்.
கு-ரை:
பத்து - என்றது இலக்கணை. மும்மதத்தன் என்ற
சிவஞான சித்தியார் காப்புக்கு மாதவச் சிவஞானயோகிகள் உரைத்த
உரையாலும் அறிக. உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவும் மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் கலதிவாய் அமணர்
காண்கிலார் கண் ஆயினும் பலர்புகழ் தென்னவனறியும்
பான்மையால் என்பதும் உள்ள வண்ணம் பலரும் உணர்ந்துய்யப்
பகர்ந்து என்பதும் சேக்கிழார் பெருமான் திருவாக்கு.
|