3435. |
ஆரெரி யாழியானு மல ரானும |
|
ளப்பரிய
நீரிரி புன்சடைமே னிரம் பாமதி
சூடிநல்ல கூரெரி
யாகிநீண்ட குழ கன்குட
மூக்கிடமா
ஈருரி கோவணத்தோ டிருந் தானவ
னெம்மிறையே. 9 |
9.
பொ-ரை: அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப்
படையுடைய திருமாலும், பிரமனும் அளக்கமுடியாதவனாய்,
கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடை
மேல் தாங்கி, இளம்பிறைச் சந்திரனைச் சூடி, நல்ல நெருப்புப்
பிழம்பு போல் ஓங்கி நின்ற அழகனானசிவபெருமான், திருகுடமூக்கு
என்னும் திருத்தலத்தில் தோலும் கோவண ஆடையும் அணிந்து
வீற்றிருந்தருளுகின்றான். அவனே யாம் வணங்கும் கடவுள்
ஆவான்.
கு-ரை:
ஆர் - பொருந்திய. எரி - அக்கினிபோல் ஒளிரும்.
ஆழி - சக்கராயுதம். நீர் - கங்கைநீர். இரி - வழிந்தோடுகின்ற.
கூர் எரி - மிக்க நெருப்புப் பிழம்பு. ஈர் உரி - உரித்த தோல்.
|