3989. |
கழுமலத்தினுட்
கடவுள்பாதமே |
|
கருதுஞானசம்
பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு
முக்கணெம் மிறையே. 12 |
12.
பொ-ரை: திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே
தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக
ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து
இன்பங்களையும் தந்தருள்வான்.
கு-ரை:
திருக்கழுமலத்துள் கடவுள் பாதத்தைக் கருதிய
ஞானசம்பந்தனின் தமிழ் வல்லவர்க்கு முக்கண் எம்மிறை இன்பமே
தரும் என்பது இப்பாட்டின் பொருள்கோள்.
|