3979.
|
சேணுலாமதில்
வேணுமண்ணுளோர் |
|
காணமன்றலார்
வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவ
ராணியொத் தவரே. 2 |
2.பொ-ரை:
ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர்
இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர்
காணும்படி அமைந்த, நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும்
நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின்
திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று
சிறந்தவர்கள் ஆவர்.
கு-ரை:
சேண் உலாம் மதில் - ஆகாயத்தை அளாவிய மதில்.
வேணு - விண்ணுளோர் இறங்குவதற்கு வைத்த மூங்கிலால் செய்த
ஏணியைப் போல். மண்ணுளோர் காண - பூவுலகில் உள்ளோர்
காணும்படி (பொருந்திய). மன்றல் ஆர் - வாசனை மிகுந்த.
வேணுபுரத்தில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடிகளைப்
பாராட்டிப் போற்றுபவர் யாவரும் சிறந்தவராவர் என்பர் பிற்
பகுதியின் பொழிப்பு. பொருந்திய என ஒரு சொல் வருவிக்க. தாணு
- சிவபெருமான். ஆணி - உரையாணிப்பொன்.
|