2802. |
கொட்ட
மேகம ழும்குழ லாளொடு
|
|
கூடி னாய்எரு
தேறி னாய்நுதற்
பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ.2 |
2.
பொ-ரை: நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி
அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப்பட்டம்
அணிந்தவனே, பூதகணங்கள் இசைபாடுவனவாகத்
திருக்கூத்தாடுவோனே, (அறிதற்கரிய) வேதங்களை ஓர்கின்ற
தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத
திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே! இவ்வைந்து
கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ?
கூறியருள்க.
கு-ரை:
பாரிடம் - பூதம், நட்டம் - நடனம்,நவிலுதல் -
பழகுதல். நட்டம் பயின்றாடும் நாதனே மறையோர் - வேதங்களை
ஓர்கின்ற. ஓர்நல்லவர் - மறையோராகிய நல்லவர் எனலுமாம்:
நல்லவர், சரியை கிரியா யோகங்களைச் செய்து பெறும்
நன்னெறியாகிய ஞானத்தைப் பெற்றவர். கொட்டம்- நறுமணம்
கொட்டமே கமழுங் கொள்ளம் பூதூர்
எனப்பின்னும் வருதல்
காண்க. நுதற்பட்டம் நெற்றியில் அணியும் ஓர் அணி. பட்ட
நெற்றியர் நட்டமாடுவர். வீரர் அணிவது நுதலணியோடையிற்
பிறங்கும் வீரப்பட்டிகை என்பதாலறிக. இசை பாடுவ - பாரிடம்
ஆ(க) - பாரிடம் இசைபாடுவன ஆக. பாரிடம் - பூதங்கள். நட்டம்
நவில்வாய் - திருக்கூத்தாடியருள்வீர். ஆளும் பூதங்கள்
பாடநின்றாடும் அங்கணன் என வன்றொண்டப் பெருந்தகையார்
அருளிச் செயலும் காண்க. நல்லவர் - நல்லொழுக்கின் தலைநின்றவராகிய தில்லைவாழந்தணர்.
நன்னெறியாகிய
ஞானத்தையுடையாருமாம். இவை மேவியது என்னைகொலோ? -
என்று வினவுகின்றார், அவை பெண் விருப்புடையான் போற்
பெண்ணோடு கூடியிருத்தலும், ஊர்தியாக ஏறுஏறுதலும்,
அணிவிருப்புடையான் போல் நெற்றிப்பட்டம் அணிந்தமையும்,
கண்டார் அஞ்சத்தக்க பூதங்களோடு கூடியாடுதலும், உலகில்
எத்தனையோ தலங்களிருக்கத், தில்லைச் சிற்றம்பலத்தை இட்டமாக
விரும்பியதும் அறிக.
|