2812. |
பந்து
சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி |
|
னாள்பனி
மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே. 1 |
1.
பொ-ரை: பந்து வந்தணைகின்ற விரல்களையும், பவளம்
போன்று சிவந்த
வாயினையும், குளிர்ந்த முழுமதி போன்ற
முகத்தையும், அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா
தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவபெருமான்
எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும். அங்குத் தேவர்கள்
எல்லாத் திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால், நினைந்து,
உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர்.
அத்தலத்தினை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
பந்துசேர் விரலாள்-பந்து பொருந்திய
விரலையுடையவள். பந்தணை விரலியும் நீயும் (திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி. 8) பந்தணை விரலாள் பங்க (வாழாப்பத்து 8)
எனத் திருவாசகத்தில் வருதலும் காண்க. துவர்-செந்நிறம்,
பவளத்துவர் வாயினாள்-பவளம்போலும் செந்நிறம் பொருந்திய
வாயையுடையவள். பனிமாமதி போன்முகத்து-குளிர்ச்சி பொருந்திய
சிறந்த சந்திரனைப் போன்ற முகத்தையுடைய. அந்தம் இல்புகழாள்-அளவற்ற புகழையுடையவள்.
விரலாளும், வாயினாளும்
ஆகிய அந்தமில்புகழாள். அளவில் புகழையுடையவள்.
உமாதேவியாரோடும். ஆதி-சிவனுக்கொருபெயர் ஆதியே ...
அருளாயே ஆதிப்பிரான்-பெயரொட்டு. சத்தியும் சிவமுமாய
தன்மை ... வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை
யெல்லாம் என்பதால் (சித்தியார் சூ-ம்1-69) அந்தமில் புகழாள்
என்றனர். வந்து, சேர்வுஇடம்-சேர்தலையுடையஇடம். புந்தி செய்து
இறைஞ்சி-புந்தி மனம், இறைஞ்சி-வணங்கி, மனம்கூடாத வழிச்
செய்கை பயன்தாராது ஆகலாற் புந்திசெய்து இறைஞ்சியென்றனர்.
செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாது (மணிமேகலை.
மலர் வனம்புக்ககாதை -76-77.) எனப் பிறர் கூறுதலும் காண்க.
வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ்செய்து இறைஞ்சி மாமலர்
பொழி பூந்தராய் என்க. போற்றுதும்-வணங்குவோம்.
|