2824. |
நிலையுறும்
இடர்நிலை யாதவண்ணம் |
|
இலையுறு
மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்றோல்
அலைவரு மதகரி யுரித்தவனே இமையோர்கள்நின்
தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
2 |
2. பொ-ரை:
ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய
தோலினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே!
அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து
உன்திருவடிகளைத் தொழும் பொருட்டு உமாதேவியோடு நிலையாக
வீற்றிருக்கின்றாய். எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை
நீ நீக்கும் வண்ணம் இலைகளையும், மலர்களையும் கொண்டு உன்
திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம்.
கு-ரை:
இப்பாட்டிற்கு, மதகரியுரித்தவனே ... புகலி மன்னினை
நிலையுறும் இடர் நிலையாதவண்ணம் இலையுறுமலர்கள் கொண்டு
(நின்) உயர் திருவடியிணையை ஏத்துதும் யாம்-எனப் பொருள்
கோள் கொள்க. நிலையுறும் இடர்-(நீக்க முடியாமையால்) நிலைத்
துள்ள துன்பங்கள். நிலையாத
வண்ணம்-நிலையாதபடி. இலையுறும் மலர்கள்கொண்டு-பத்திர புட்பங்களால். ஏத்துதும்-(துதித்து)
வழி
படுவோம். மலையினில் அரிவையை வெருவ-இமயமலையில் (அவ
தரித்த) உமாதேவியாரை அஞ்சுவிக்க. வல்தோல்-வலிய
தோலையுடைய.மதகரி-மதங்கொண்ட யானை. வெருவ என்ற
சொல்லில் பிறவினை விகுதி தொக்கது.
|