2854. பொருத்த மில்சமண் சாக்கியக் பொய்கடிந்
  திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
     பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
       ஏந்து மான்மறி யெம்இ றையே.           10

     10, பொ-ரை: வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர்,
புத்தர்களின் பொய்யுரைகளை ஒதுக்கி, விண்ணோர்கள் வணங்கும்
படி வீற்றிருக்கும் கடவுள், திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக்
கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே
ஆவான்.

     கு-ரை: பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய்கடிந்து -
அளவை நூலுக்குப் பொருத்தமில்லாத சமணநூலும் சாக்கியநூலும்
சொல்லும்பொருளை நீக்கி. இமையோர் தொழ இருத்தல் செய்த
பிரான் - இமையோர் தொழ இருந்தபிரான். கைமான்மறி ஏந்தும் எம்
இறை - அவனே கையில் மான்மறியேந்தும் எம் இறை. கைஏந்தும்
மான் மறி எந்தை - இலாத வெண் கோவணத்தான் என்பதுபோல
நின்றது.