2855. |
புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய்
|
|
அந்தம்
இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறி டுமே. 11 |
11.
பொ-ரை: உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள்
வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள,
என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத்
திருஞானசம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக்
கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப் பந்தித்து நின்ற வினைகள்
யாவும் நீங்கும்.
கு-ரை:
எம் அடிகளை ஞானசம்பந்தன் மாலைகொண்டேத்தி
வாழுங்கள். அதனால் ஒளிபுக்க இடத்தில் இருள் தானாக நீங்குதல்
போல நம்மைப் பந்தித்து நின்ற பழவினைகள் மாறிவிடும். அந்தம்
இல் அடிகள் - முடிவில்லாத எம்கடவுள்.
|