2880. |
நாதனும்
நள்ளிரு ளாடினா னும்நளிர் |
|
போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு
வேறியும்
காதலர் தண்கட வூரினா னுங்கலந்
தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர
னல்லனே. 3.
|
3.
பொ-ரை: எல்லா உலகங்கட்கும் தலைவனும், மகாசங்கார
காலத்தில் நடனம் புரிபவனும், அடியவர்களின் இதயத்தாமரையில்
வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும்,
அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு
பவனுமான இறைவன் யாவரும்
வணங்குமாறு வேதத்தை அருளிச்
சய்த வீரட்டானத்து அரன் அல்லனோ?
கு-ரை:நளிர்போதின்
கண் பாதனும்-அடியார்களின் குளிர்ந்த
தாமரை(இருதய) மலரின்கண் தங்கும் திருவடியையுடையவனும்,
காதலர்-அன்பர்கள் வசிக்கும். தண்-குளிர்ச்சி பொருந்திய,
கடவூரினானும்-திருக் கடவூரில் எழுந்தருளியிருப்பவனும்.
|