2882. சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல்
       வாயதோர்
படமணி நாகம் ரைக்கசைத் தபர
     மேட்டியும்
கடமணி மாவுரித் தோலினா னுங்கட
     வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர
     னல்லனே.                            5

     5. பொ-ரை:சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம்
அணிந்துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப்
பூசியுள்ள வனும், அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக
அணிந்துள்ள கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப்
போர்த்தவனும், திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில்
கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன்
அல்லனோ? விடமணிகண்டன்-“நீலமணி மிடற்று ஒருவன் போல”
(ஒளவையார், புறநானூறு) நினைவுகூர்க.

     கு-ரை:சுடர்மணி-ஒளிர்கின்ற உருத்திராக்க மணி, சுழல்வு
ஆயது ஓர் படம் மணிநாகம் அரைக்கு அசைத்த-மண்டலம்
இடுகிறதாகிய ஒரு பாம்பை இடுப்பிற் கட்டிய. கடம் அணி-மா
மதத்தையுடைய அழகிய யானை.