2904. |
ஊறுடை
வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும் |
|
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே. 5 |
5.
பொ-ரை: கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி
ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை
ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக்
கொடியுடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். வீடுபேற்றை நல்கும் அவன் திருப்பெயரை
ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.
கு-ரை:
ஊறு - திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும்
பொறி, ஐந்தனுள் அத்தலைக்குமட்டும் வாய்த்ததால் ஊறுடை
வெள்தலை எனப் பட்டது. சுவை ஒளி ஊறு என்பவற்றில் வரும்
ஊறு எனில் பொருட் சிறப்பில்லை. (உறுவது - ஊறு. பெறுவது -
பேறு) வீறு - வேறு ஒன்றிற்கு இல்லாத அழகு. ஐயம் - பிச்சை.
விறல் - வலி. வெற்றி. ஏறு - விடை. சிவனது கொடியில் எருதுருவம்
உண்டு. பெயர் - பவாதி சிவநாமங்கள். பிணி - பிறவிப்பிணியும்
அதுபற்றி வருவனவும். பேரும் - பெயரும். வந்தவழி மீண்டொழியும்.
(முத்து. சு.)
|