2931. |
கொடியுயர்
மால்விடை யூர்தியி னான்திருக் |
|
கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு
ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம்
பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை
பாவமே.
11 |
11.
பொ-ரை: இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும்
கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க, திருநடனம்
புரியும் அருளாளன். அப்பெருமானை நறுமணம் கமழும்
சோலைகளையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய
இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம்
யாவும் நீங்கும்.
கு-ரை:
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் - கொடியின்
கண் உயர்த்திய பெரிய இடபத்தைவாகனமாகவும், உடையவன்.
மால்விடை யென்பதற்குத் திருமாலாகிய விடை எனலுமாம்.
|