2942. |
புரமெரி
செய்தவர் பூந்த ராய்நகர்ப் |
|
பரமலி
குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.
11 |
11.
பொ-ரை: முப்புரம் எரித்த சிவபெருமான் திருப்பூந்தராய்
என்னும் திருத்தலத்தில் அடர்த்தியான கூந்தலையுடைய உமா
தேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.
அப்பெருமானை ஞானசம்பந்தன் நவின்ற இம்மெய்ம்மைப்
பதிகத்தால் போற்ற வல்லவர்கள் தலையானதாகக் கருதப்படுகின்ற
சிவகதியை நிச்சயம் பெறுவர்.
கு-ரை:
பரம்-பாரம். கூந்தல்; அளகபாரம் எனப்படுவதால்,
பரம் மலி குழல் எனப்பட்டது. மிக்க கூந்தல் என்பது பொருள்.
சிரம்மலி-உயர்நிலையதாகிய சிவகதி.
ஒவ்வொரு பாசுரத்திலும்
திரிபுரத்தை எரித்தவர், பூந்தராய்
நகரில் வீற்றிருக்கும் உமாபதி என்று கூறிவந்து, திருக்கடைக்
காப்பிலும் புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் பரமலிகுழலுமை
நங்கை பங்கரைப் பரவிய பந்தன் மெய்ப்பாடல் வல்லவர், சிரமலி
சிவகதி சேர்தல் திண்ணமே எனத் தொகுத்துக் கூறியிருப்பது
இப்பதிகத்துக்குரிய சிறப்பியல்பு.
|