3030. |
கானலில்
விரைமலர் விம்மு காழியான் |
|
வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே. 11 |
11.
பொ-ரை: கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும்
மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான
மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை
ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும்.
கு-ரை:
மைந்தன் - சம்பந்தன். சிவனொளியே தான் ஆன
மெய்ஞ் ஞானசம்பந்தம் பெற்ற வலிமையோடு கூடியவன்.
|