3040. |
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் |
|
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே. 10 |
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்
வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால்
உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல
சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும்
பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன
திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
சமணர்களாகிய கழுவையேந்திய கையையுடையவர்.
வித்தகம் நீறு - திறமையைத் தரும் விபூதி. அத்திரம் - அம்பு.
நீறணிவார் - சிவனடியார். வினை - போர். வினைநவின்ற யானை
என்பது புறநானூறு. சிவனடியார் மேற் போர்புரியப் பகைவர்
எவர்வரினும் அவரை எதிர்த்து அம்பு போற்பாய்ந்து அழிக்க
வல்லது திரு ஐந்தெழுத்துமே. போதி மங்கையில் கூட்டத்தோடு
புகலியர் கோனை எதிர்த்த புத்த நந்தி தலையில் இடிவிழச் செய்தது
இப்பாசுரமே. வினையாகிய பகைக்கு ஐந்தெழுத்து ஆகிய
அத்திரம் என்றது உருவகம்.
|