3048. |
விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம் |
|
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 7 |
7.
பொ-ரை: அரும்பொருளுரைக்கும் வேதங்களை இறைவன்
விரித்து அருளியவன். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில்
தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி
எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின்
கீழ்த்துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்த விளையாடல்
செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருவிற்கோலம் ஆகும்.
கு-ரை:
ஆசுஅற - பற்றற (முற்றிலும்). சிரித்தல் - திரு
விளையாட்டு. அவனைக் கதறச் செய்தல் தமக்கொரு
திருவிளையாட்டாய் இருந்தது.
|