3052. |
மண்ணின்நல்
லவண்ணம் வாழலாம் வைகலும் |
|
எண்ணின்நல்
லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 1 |
1.
பொ-ரை: உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு
வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு
குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை
அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய
கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு
பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
கதிக்கியாதும் - கதிக்கு+யாதும். ஓர் குறை இ(ல்)லை.
கண்ணின் நல்லது உறும் - கண்ணுக்கினிய நல்லவளத்தையுடைய.
கழுமலவளநகர் கண்ணின் நல்லஃது.
|