3075. |
நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப் |
|
பெண்ணின்நல்
லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை
நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே. 2 |
2.
பொ-ரை: நுண்ணிய இடையையும், பெரிய அல்குலையும்,
சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின்
நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, விண்ணுலகை ஆளும்
விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும்.
கு-ரை:
நுண்இடை-சிறிய இடுப்பு. நூபுரம்-சிலம்பு. விண்-ஞான
ஆகாயம். இடை-ஏழன் உருபு.
|