3095. தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
  கண்ணுத லவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.   11

     11. பொ-ரை: குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த
அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய
சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த
செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப்
பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும்.

     கு-ரை: மெய்ப்பாவமே-உடம்பினாற் செய்த பாவம் . எனவே
ஏனைக்கரணங்களாற் செய்த பாவமும் அடங்குதலறிக.