3109. பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
  கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணனார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் என்மையா ளுடையஎம் மடிகளே.                                               3

     3.பொ-ரை: சிவபெருமான் அரிய வேதங்களை உரிய
பண்ணோடு பாடியருளினார். அவர் நெற்றிக்கண்ணை உடையவர்.
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும்
திருத்தலத்தில், ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய
சடைமடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை
ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார்.

     கு-ரை: பண்ணின் ஆர்-பண்ணோடு பொருந்திய. அருமறை
பாடினார். ஆகாய கங்கை சடைமுடியின்கண் தங்கப்பெற்றவர்.