3115. |
செங்கண்மால்
திகழ்தரு மலருறை திசைமுகன் |
|
தங்கையால்
தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே. 9 |
9.
பொ-ரை: சிவந்த கண்களையுடைய திருமாலும், தாமரை மலரில்
வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர்
சிவபொருமான். கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய
கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை.
கு-ரை:
கைபெற்ற பயன் கடவுளைத் தொழுவது, ஆதலால்
கையால் தொழுது எனல் வேண்டா கூறலன்று கரம் தரும் பயன் இது
என உணர்ந்து என்பது பெரியபுராணம்.
|