3136. |
சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் |
|
கரமிரு
பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை யடிபணிந் துய்ம்மினே. 8 |
8.
பொ-ரை: பத்துத் தலைகளையுடைய, போர் செய்யும்
வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும்
கெடுமாறு, கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய்,
வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த
திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த
சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை
அடையுங்கள்.
கு-ரை:
சிரம், ஒருபதும் - ஒருபத்தும், செருவலி -
போர்செய்யும் வலிமையையுடைய. மரவு- வெண்கடம்பு.
|