3199. |
பித்தனைப்பிர மாபுரத்துறை |
|
பிஞ்ஞகன்கழல்
பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
செய்துநன்பொருண் மேவிட
வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யுமெய்ம் மாந்தரே. 10 |
10.
பொ-ரை: பித்தனும், திருப்பிரமபுரத்து உறைகின்ற
பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி,
மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு
அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில், ஞானசம்பந்தன்
திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும்
பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால்
போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர்.
கு-ரை:
சிந்தையுள் தங்கி நா நவின்று எழுந்த, மாலைகள்.
நன்பொருள் - வீடு. போற்றி செய்யுங்கள் - செய்வீரேல்,
மெய்யுணர்ந்த மாந்தர் ஆவீர்கள், நன்பொருள், ஞானம் எனலும்
பொருந்தும்.
|