3223. கொன்றைசூடி, நின்றதேவை
  அன்றியொன்று, நன்றிலோமே.      2

     2. பொ-ரை: கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவ
பெருமானை அன்றி, பிறிதொரு தெய்வமும் முக்திச் செல்வம்
தருவதாக நாம் கருதோம்.

     கு-ரை: நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக்
கொள்ளுதல் இலோம். இல்லோம் - கொள்ளோம்.