3231. மொட்டமணர், கட்டர்தேரர்
  பிட்டர்சொல்லை, விட்டுளோமே        10

     10. பொ-ரை: தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன்
விளங்கும் சமணர்களும், கட்டான உடலமைப்புடைய புத்தர்களும்,
சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக்
கொள்ளாது விட்டோம்.

     கு-ரை: மொட்டு - பூ. அரும்பு - அதுபோன்ற
தலையுடைமையின் மொட்டமணர் என்றார். கட்டர்-துன்புறுத்துவோர்.