3238. நலமார்கச்சி, நிலவேகம்பம்
  குலவாவேத்தக், கலவாவினையே.        6

     6. பொ-ரை: நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற
திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை
நீங்கும்.

     கு-ரை: நிலவு-விளங்குகின்ற. குலம் ஆக. குலவா - குலவி.