3263. |
காலன் தன்னுயிர் வீட்டு கழலடி |
|
மாலு நான்முகன் றானும் வனப்புற
ஓல மிட்டுமுன் றேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே. 9 |
9.
பொ-ரை: காலன் உயிரைப் போக்கிய இறைவன்
திருவடியைத் திருமாலும், பிரமனும் வனப்புறும் தோற்றத்தினராய்
ஓலமிட்டுத் தேடியும் காணவொண்ணாத சிறப்புடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் ஊர் பெருமையுடன் திகழும் சீகாழியாகும்.
கு-ரை:
"மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்றும்
கீழிடந்து மாலும் அறிந்திலன் .......... காலன் அறிந்தான் அறிதற்
கரியான் கழலடியே" என்ற கருத்து.
|