3286. மாசு மெய்யினர் வண்டுவ ராடைகொள்
  காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்றிரு வாரூரெம்
ஈசன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.   10

     10. பொ-ரை: அழுக்கு உடம்பையுடைய சமணர்களும்,
துவராடை அணிந்த புத்தர்களும், கூறும் பயனற்ற சொற்களைக்
கொள்ளாதீர், அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில்
வீற்றிருந்தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று
நின்று அருள்புரிவாரோ!

     கு-ரை: துவர் ஆடைமேற்கொள்ளும் - செந்நிறப்
போர்வையைப் போர்க்கும். காசை - காஷாய உடை. திவ்வியப்
பிரபந்தம் 1658. காசை மலர் போல்மிடற்றார். தேசம் - ஒளி.