3290. |
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் |
|
குழக ரென்றுகுழை யாவழை யாவரும்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 3 |
3.
பொ-ரை: பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத்தொண்டர்கள்
இன்னிசையோடு பாடி அழகனான சிவபெருமானைக் குழைந்து,
அழைத்து, கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட
பாக்களைப் பாட, திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் அழகரான
சிவபெருமானின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த
வண்ணமாகும்.
கு-ரை:
இதிலுள்ளதொரு வரலாறு விளங்கவில்லை. குழையா
- குழைந்து. அழையா - அழைத்து. உள்ளம் குழைந்து அழைத்து
வரும். கழல் கொள் பாடல் - கழலணிந்த திருவடியையே
பொருளாகக் கொண்ட பாக்கள்.
|