3293. |
மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட |
|
ஆசை யாரவரு
ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 6 |
6.
பொ-ரை: மாசில்லாத தொண்டர்கள் மலர்தூவி வணங்கிட
அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவ
பெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக் கொண்டு
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர்
வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
ஆசை ஆர - ஆசைநிரம்ப. அருள் நல்கிய
செல்வத்தர், ஆசை தீரக் கொடுப்பர், என்பதும் காண்க.
|