3308. |
செந்தெ னாமுர லுந்திரு வாலவாய் |
|
மைந்த
னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே. 11 |
11.
பொ-ரை: வண்டுகள் முரலும் திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின்
நெறிகளிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தழிழால் இறைவன்
திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய
இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க ஓதுவீர்களாக!
கு-ரை:
தமிழ்கேட்ட - தமிழாற் கேட்ட என்பது ஒவ்வொரு
பாடலிலும் திருயுள்ளமேயெனக் கேட்டமையைக் குறிக்கிறது. பழி
நீங்கப் பகருமின் - பழி நீங்குவதற்குச் சொல்வீராக.
|