3331. |
விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே |
|
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே. 1 |
1.
பொ-ரை: விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும்
தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள
சடை முடியையுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது
கரும்பும், செந்நெலும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம்
கொழிக்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத்
தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
கு-ரை:
விரும்பும் - விரும்பப்படுவதாகிய. திங்களும் -
சந்திரனும். (கங்கையும்). விம்ம - பொலிவு அடைய. வெறுக்கப்படும்
தன்மைவாய்ந்தது, பின்கடவுள் அணிதலால் விரும்பப்படுவதாயிற்று.
சுரும்பு, தும்பி, இவை வண்டின் சாதி விசேடம். மலரின் நறு
மணத்துக்காகச் சூழ்கின்றன.
|