3391. |
பொறிவாய் நாகணையா னொடுபூமிசை |
|
மேயவனும்
நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி
தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி
யூருறையும்
அறிவே யுன்னையல்லா லடையாதென
தாதரவே. 9 |
9.
பொ-ரை: நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும்
வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை
மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட
திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு
அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள்
சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை
உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும்
ஆதரவாக அடையாது.
கு-ரை:
பொறிவாய்-புள்ளிகள் பொருந்திய, நாகணையான்
-நாக அணையான், நாகணை என்பது மரூஉ கோணாகணையானும்
எனப் பின்னும் வருதல் அறிக. நீள்கழல் - பாதாளத்தின் கீழும்
நீண்ட திருவடிகள். மேல்முடி - வானுலகின் மேலும் சென்றமுடி.
நெறியார் கழல்.
|