3392. |
குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய |
|
ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர்
பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி
யூருறையும்
அண்டா வுன்னையல்லா லடையாதென
தாதரவே. 10 |
10.
பொ-ரை: விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும்,
முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய்
உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும்
வீதிகளையுடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே!
உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.
கு-ரை:
குண்டு ஆடும் சமணர் - விதண்டை பேசுகின்ற,
கண்டார் காரணங்கள் கருதாதவர் - சிலவற்றையறிந்தும், அவற்றின்
காரணங்களை அறியாதவர் என்றது, உலகு உள் பொருள் என்று
அறிந்தும் அது ஒருவனாற் படைக்கப்படவில்லை எனல் போல்வன.
அண்டா - தேவனே.
|