3424. |
பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும் |
|
பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுட னாவது
மேற்பதொன்றே காரெழில்
வண்ணனோடு கன கம்மனை
யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி
யமர்ந்தவனே. 9 |
9.
பொ-ரை: மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த
தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை
அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும், உடனாகக் கொண்டு
அழகிய இரண்டு கோலமாகவும், கார்மேகம் போன்ற அழகிய
வண்ணனான திருமாலும், பொன்போன்ற நிறமுடைய பிரமனும்,
காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி, திருசாத்தமங்கை
என்னும் திருத்தலத்தில், திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
பெண்ணோர் பாகம் - ஒரு பாகத்திற் பெண்ணும்
ஒரு பாகத்தில் ஆணுமாகி. ஈரெழிற் கோலமாகி - அழகிய இரண்டு
கோலமாகி. உடன் ஆவது - ஓருருவமாவதும். கனகம் அனையான்
- நிறத்தினால் பொன்னொப்பான் ஆகிய பிரமன். ஆர் அழல்
வண்ணம் ஆகி, அருமை + அழல் அணுகற்கரிய தீயின் வண்ணம்
- இங்கு வடிவின் மேல் நின்றது. மங்கை - சாத்தமங்கை.
|