3429. மயில்பெடை புல்கியால மணன் மேன்மட
       வன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங் காவிரிப்பைம்
     பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடை யான்குட
     மூக்கிடமா
இயலொடு வானமேத்த விருந் தானவ
     னெம்மிறையே.                       3

     3. பொ-ரை: ஆண்மயில் பெண்மயிலைத் தழுவி ஆட,
காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன்
பெண் அன்னத்தோடு நடைபயில, வண்டுகள் பண்ணிசைக்க,
நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது
பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும்
திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க
வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: புல்கி - தழுவி. ஆல - ஆட. மல்கும் -
நிறைந்திருக்கும். பயில் - தங்கியுள்ள. இயலொடு - முறைப்படி.
வானம் ஏத்த.