3433. |
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தானெழில் |
|
வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத் தான்புர
மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட
மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி யிருந் தானவ
னெம்மிறையே. 7 |
7.
பொ-ரை: மலைமகளாகிய உமாதேவியைத் தன்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, மகிழ்ந்து விளங்கும்
சிவபெருமான் எழில்மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை
வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து,
மூன்று புரங்களையும் சிதைத்தவன். கொத்தாகக் காய்க்கும்
பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த
திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற
சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம்
வணங்கும் கடவுளாவான்.
கு-ரை:
வையம் உய்ய மங்கைபாகம் மகிழ்ந்தான். உலகம்
அவன் உரு ஆகலான். உலகில் இல்லற தருமம் நடத்தற்கு அவன்
அம்மையோடு கூடியிருத்தலின் வையம் உய்ய மங்கை பாகம்
மகிழ்ந்தான் என்றார். பெண்பால் உகந்திலனேற் பேதாய் இரு
நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ - என்ற
திருவாசகத்தாலும் அறிக. இலைமலி சூலம்
- இலைவடிவத்தையுடைய சூலம்.
|