3451. |
படைநவில் வெண்மழுவான் பல பூதப் |
|
படையுடையான்
கடைநவின் மும்மதிலும் மெரி யூட்டிய
கண்ணுதலான் உடைநவி
லும்புலித்தோ லுடை யாடையி
னான்கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம்
வெண்டுறையே. 3
|
3.
பொ-ரை: சிவபெருமான் தூய மழுப்படை உடையவர்.
பலவகையான பூதகணங்களைப் படைவீரர்களாகக் கொண்டுள்ளவர்.
பாவங்களைச் செய்து வந்த மூன்று மதில்களையும் எரியுண்ணும்படி செய்த நெற்றிக் கண்ணையுடையவர்.
புலித்தோலாடை அணிந்தவர்.
விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக்
கொடியாக உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலத்தைப்
போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
படைநவில் - படையாகக் கொள்கின்ற. கடைநவில்
- பாவங்களைச் செய்துவந்த, மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான்
கடை - பாவம் அறன்கடை (திருக்குறள்). உடைநவிலும் -
உடையாகக் கொள்ளப் படும். புலித்தோல், உடை ஆடையினான் -
ஆடையாக உடையவன். உடை - உடு என்னும் வினையடியாகச்
செயப்படுபொருள் உணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்தும், உடைமை
என்னும் விகுதி குன்றி வினைத்தொகையின் நிலைமொழியாயும்
நின்றது. கடிய - விரைந்து செல்லக் கூடிய (விடை) நவிலும் -
பொருந்திய, கொடியான்.
|