3472. |
பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ |
|
டுடன்வாழும்
அன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய்
வருவீர்காள்
கன்னவிறோட் சிறுத்தொண்டன்
கணபதீச் சரமேய
இன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல
லுரையீரே. 2 |
2.
பொ-ரை: பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும்
புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம்
துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில்
பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும்
சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான
அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக்
கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற
இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து
என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா?
கு-ரை:
பொன்னம்பூம் கழிக்கானல் - பொன்போன்ற
மகரந்தத்தை யுதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கழியருகே
உள்ள கடற்கரைச் சோலையில். புணர்துணையோடு - கூடிய
துணையுடனே. உடன் வாழும் - இணைபிரியாது வாழ்கின்ற.
அன்னங்காள் - அன்னப் பறவைகளே. அன்றில்காள் -
அன்றிற்பறவைகளே.
அகன்றும் போய்
- இரையின் பொருட்டு (இச்சோலையை)
நீங்கிப் போய். வருவீர்காள். தங்குவதற்கு இங்கே வந்து
கொண்டிருக்கின்றீர்கள். இன் அமுதன் - இனிய
அமுதுபோல்வானது. இணை அடிக்கீழ் - இரு திருவடிகளின்
முன்பாக. எனது அல்லல் எனது பிரியாத் துயரை. உரையீரே
- சொல்ல மாட்டீரோ.
|