3532. |
சென்றுபல வென்றுலவு புன்றலையர் |
|
துன்றலொடு மொன்றியுடனே
நின்றமர ரென்றுமிறை வன்றனடி
சென்றுபணி கின்றநகர்தான் துன்றுமலர்
பொன்றிகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்னிவைமுன்
னின்றகயி லாயமலையே. 7 |
7.
பொ-ரை: நன்மக்கள் ஐம்புலன்களையும் வென்றவர்களாய்
குறுமயிர் பொருந்திய தலைகளையுடைய பூதகணங்களோடு சேர்ந்து,
தேவர்களும் உடன்நிற்க எக்காலத்தும் இறைவனின் திருவடிகளை
வணங்குகின்ற நகர், கொத்தாக மலரும் பொன்போல் விளங்கும் கொன்றை மலர்களின்
நறுமணம் தென்றற்காற்றோடு பரவ, இள
யானைக்கன்றுகளும், பெண் யானைகளும், ஆண் யானைகளும்
மலையின் முற்பக்கங்களில் உலவுகின்ற திருக்கயிலாயமலையாகும்.
கு-ரை:
சென்று - பகைவர் இருக்குமிடம் போய். பல - பல
போர்களிலும், வென்று - செயித்து. உலவு - திரிகின்ற, புன்
தலையர் - குறு மயிர்கள் பொருந்திய மலையுடையவர்களாகிய
பூதகணங்களின்; துன்றலொடும் - கூட்டத்தொடும், ஒன்றி - சேர்ந்து.
உடனே நின்று - ஒரு சேர நின்று, அமரர் தேவர்கள் சென்று -
போய் என்றும் எக் காலத்தும்; இறைவன் தன் அடி - கடிவுளின்
பாதங்களை - பணிகின்ற, வணங்குகின்ற, நகர்தான் - தலமாவது.
துன்றும்-கொத்தாகப் பொருந்திய, மலர் - பூக்கள், பொன் -
பொன்னைப் போல, திகழ் செய் - விளங்குகின்ற, (கொன்றை
மாலையின்) விரை - வாசனை, (தென்றற்காற்றொடு) சென்று - பரவி,
கமழ - மணக்க, கன்று -கன்றுகளும், பிடி பெண்யானைகளும்,
குன்று - நெருங்கிய. களிறு - ஆண் யானைகளும், என்று இவை
இத்தகைய மிருகங்கள்; முன்நின்ற-மலையின் முற்பக்கங்களிலே
நிற்கின்ற; கயிலாயமலை. புன்தலையர் புன்றலைய
பூதப்பொருசடையாய் என்னும் திருமுருகாற்றுப்படை (தி.11)
வெண்பாவாலறிக.
|