3609. |
விண்பொயத னான்மழைவி ழாதொழியி |
|
னும்விளைவு
தான்மிகவுடை
மண்பொயத னால்வளமி லாதொழியி
னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல
தோறுநிலை யானபதிதான்
சண்பைநக ரீசனடி தாழுமடி
யார்தமது தன்மையதுவே. 7 |
7.
பொ-ரை: வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும்,
மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல்
போனாலும், அடியவர்கட்கும், மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத்
தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள், நெடிய உலகத்தில் பல
ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும்.
அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது
வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும்.
கு-ரை:
விண் - மேகம். பொய் அதனால் - பொய்த்ததனால்.
மழை விழாது ஒழியினும் - மழைத்துளிகள் விழாது ஒழிந்தாலும்.
விளைவுதான் மிகவுடை - விளைவு மிகுதலையுடைய. மண்பொய்
அதனால் - நிலம் வறண்டமையால். வளம் இராது ஒழியினும் -
வளம் இல்லாமல் போயினும். தமது வண்மை வழுவார் - தமது
கொடை தவறாதவர்களாகி. உண்பகர - அடியவர்களுக்கு உணவு
தர. வார் உலகின் - நெடிய உலகத்தில், (பல ஊழிதோறும்,
நிலையான பதி சண்பை நகராகும்.)
ஈசன்
அடி - அங்குள்ள சிவபெருமானின் திருவடிகளை.
தாழும் அடியார் - வணங்கும் அடியார்களது. தன்மை அது -
தன்மையும் அதுவாம் என்றது தலத்திலுள்ள வள்ளியோர்
வான்பொய்ப்பினும், மண்பொய்ப்பினும் வண்மைகுன்றாவாறு
போல அடியார்களும் வானந்துளங்கினும் மண்கம்பமாகினும்,
அஞ்சகில்லாது தம்வழிபாடு குறைவின்றிப் பூசிப்பர் என்பதாம்.
மழைவிழாதொழிதலும்
மண்வளமிலாதொழிதலும் ஒரு
காலத்தும் நேரா என்ற பொருள் தரலால் அவை
எதிர்மறையும்மைகள். உணவு என்ற பெயர்ப்பகுபதம் உண்
எனப் பகுதியளவாய் நின்றது.
|