3734.
|
தளிரிள
வளரொளி தனதெழி |
|
றருதிகழ்
மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை
யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள்
ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 1 |
1.
பொ-ரை: இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை
அடைதல் போல், வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின்,
குளிர்ந்த, வளரும் இள ஒளிவீசம் அழகிய முலையை மகிழ்ந்து
தழுவப் பெறுதலால். குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம்
புகழ்கூறும், போகமார்த்த பூண் முலையாள் என்று தொடங்கும் (தி.1.
ப.49. பா.1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை, அவர் திருமேனி
போல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது
இல்லாதனவாம் என்பது சத்தியமே.
கு-ரை:
வளர் - வளரக்கூடிய. தளிர் - தளிரின். இள ஒளி -
இளம் பிரகாசத்தின். எழில் தரு - அழகைத் தருகின்ற. திகழ் -
விளங்குகின்ற. மலைமகள் - உமாதேவியார். (குளிர் வளர் இள ஒளி.)
வனம் - அழகை உடைய முலை. இணை அவை - இரண்டும்.
குலவலின் - மகிழ்ந்து
தழுவப்பெறுதலால். நளிர் - குளிர்ந்த, (வளர்,
இள ஒளி). மருவு - பொருந்திய (நள்ளாறர்தம்) நாமமே -
புகழ்களேயாகும் இவை. ஆதலின், மிளிர் - அவர் திருமேனிபோற்
பிரகாசிக்கின்ற (வளர் இளம்). எரி இடில் - நெருப்பில் இட்டால்.
இவை - போகமார்த்த எனத் தொடங்கும் இத் திருப்பதிகம்
எழுதியஇவ்வேடும் இவைபோல்வனவும். பழுது இலை - பழுது
இல்லாதன ஆம். மெய்ம்மை - (இது) சத்தியம். ஐம்பான் விடத்திற்கும் பொது ஆனதால்
இல்லை என்னும் குறிப்பு முற்று இவை என்ற
எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. முதிய, வலிய நெருப்பின்
(சிவபெருமான்) திறனை - இளநெருப்பு எரிக்குமா? என்ற குறிப்பு.
|