3740. |
கார்மலி
நெறிபுரி சுரிகுழன் |
|
மலைமகள்
கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை
திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள்
ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 7 |
7.
பொ-ரை: அடர்த்தியான, பின்னப்பட்ட, சுருண்ட கார்
மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான
உமாதேவியின் அழகிய, சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம்
அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும், மண்டையோட்டை
மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப்
போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும்
இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
கு-ரை:
கார்மலி - மேகம் போன்ற. மலி - உவமவாசகம்,
நெறி, செழிப்புடைய. புரி - கட்டப்பட்ட. சுரி - சுரிந்த (குழல்
மலைமகளின்) நகு வெண்டலையைச் சிறந்த மாலையாகவுடைய
நள்ளாறர்தம் நாமமே.
|