3742. |
கான்முக
மயிலியன் மலைமகள் |
|
கதிர்விடு
கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை
துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள்
ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 9 |
9.
பொ-ரை: காட்டில் விளங்கும் மயில் போன்ற
சாயலையுடைய உமாதேவியின், ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும்
பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும், பிரமனும், திருமாலும்
அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று
இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட
ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை
பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
கு-ரை:
கான்முகம் - காட்டிடத்துள்ள. மயில் இயல் - மயில்
போன்ற சாயல். பால் முகம் இயல் (பால் சுரக்கும் இடமாகப்
பொருந்திய, தமக்கு ஞானப்பாலை ஊட்டியருளிய செயலை
நினைப்பித்தவாறு) பணை - பருத்த, இணைமுலை - உபயதனங்கள்.
மேல்முக(ம்) எரி - மேல் நோக்கிய நெருப்பு.
|