3766. |
காய்ந்துதங்
காலினாற் காலனைச் |
|
செற்றவர்
கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென விருந்தநல்
லடிகளை யாதரித்தே
ஏய்ந்ததொல்
புகழ்மிகு மெழின்மறை
ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர்
நல்லர்வா னுலகின்மேலே. 11
|
11.
பொ-ரை: தம் அடியவனான மார்க்கண்டேயனின்
உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து
மாய்த்தவரும், காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும்
திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென
ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான
சிவபெருமானிடம்
பக்தி கொண்டு, பொருந்திய
தொன்மையான புகழ்மிகுந்த, அழகிய,
மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ்
மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில்
மேன்மையுடன் வீற்றிருப்பர்.
கு-ரை:
காலனைக் காய்ந்து காலினால் செற்றவர். ஆய்ந்து -
இதுவே எவற்றினும் சிறந்ததென ஆராய்ந்து. கொண்டு - தேர்ந்து.
கடிகொள் - காவலையுடைய. கொச்சை இடம் என இருந்த அடிகளை ஞானசம்பந்தன் சொன்ன (மாலை).
ஆய்ந்த - ஆராயந்துணர்த்திய
(இம்மாலைகள் வல்லவர். வான் உலகில் மேன்மையுடையவராவர்)
மேல் - மேன்மையுடையவர்; ஆகுபெயர்.
|