3819. |
விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய |
|
அரைமல்கு
புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவ ருயர்வே. 10 |
10.
பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே!
அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம்
இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு
அடைவர்.
கு-ரை:
அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய
புலித்தோலை உடையீரே. மல்கு - பொருந்திய, இங்குக் கட்டிய
என்னும் பொருளில் வந்தது. உரைமல்கு புகழவர் - வார்த்தையால்
உம்மை நிரம்பப் புகழ்தலையுடையவர். அவர் உயர்வே உண்மையான
உயர்வாகும். குறிப்பு:
இப்பதிகத்தில் 8,9,10 இப்பாசுரங்களில் ஏனைப்
பதிகங்களிற் கூறும் முறை இல்லை.
|